Maana Illa Mayila |
---|
மானா இல்ல மயிலா
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா
ராஜா உடன் ராணி
ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ
மானா
ஆஹா
இல்ல மயிலா
ஓஹோ
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா
மானா
ஆஹா
இல்ல மயிலா
ஞாபகம் ஒரு ஆலயம் அதில்
வாழும் நாளை பேசும் பார்வைகளே
வாழலாம் எனும் ஆசையில் தினம்
ஏங்கும் எந்தன் காதல் பாடல்களே
பொன்னான வேளையிலே புது ராகங்கள்
பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்
பொன்னான வேளையிலே புது ராகங்கள்
பூச்சூட்டும் போதினிலே கவி மேகங்கள்
ராஜா
ஆ
உடன் ராணி
அய்யோ
ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ
மானா இல்ல மயிலா
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா
மானா இல்ல மயிலா
ஆயிரம் கதை பேசுவோம்
மழை சேரும் மணல் போல உறவாடுவோம்
நாளெல்லாம் விழா தோரணம்
உன் நாணம் தானே நின்றே வரவேற்குமோ
வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும்
வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும்
வாழ்நாளில் நீ இருந்தால் எனக்கது போதும்
வாசலிலே கோலமிட்டால் காயங்கள் ஆறும்
மானா
ஆஹா
இல்ல மயிலா
ஓஹோ
மலர் பூந்தோட்டமா எழில் தேரோட்டமா
முகம் காணாமல் காண்கின்ற கலைக்கூடமா
ராஜா
ஆ
உடன் ராணி
அஹ ஹா
ரதி நானல்லவோ மதன் நீயல்லவோ
புது ராஜாங்கம் கொண்டாடி அரசாளவோ
மானா
ஆஹா
இல்ல மயிலா
இல்ல இல்ல
ராஜா உடன் ராணி
நன நன மானா இல்ல மயிலா