Maavaatta Naanum Varattaa |
---|
ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
அடி பூ முடிச்சு பொட்டு வச்ச புள்ளே
நீ போய் சும்மா குந்திக்கடி உள்ளே
நா ஆட்டுக்கல்ல ஆட்டுறதில் சூரன்
அடி அதுக்கு தாண்டி மீச வச்ச வீரன்
அண்ணன் ஒரு
கில்லாடி தான்
கண்டுக்குவேன்
பின்னாடி தான்
வச்சிடுவான்
சொக்குப் பொடி
வச்சா அது
நெத்தியடி
ஹேய் மாவாட்ட நானும் வரட்டா
ஏ சின்ன பொண்ணே பூவாட்டம் சுட்டுத் தரட்டா
முன்னால தோப்பிருக்கு
முழுசாதான் காய்த்திருக்கு
பாரு தென்னை இளநீரு
அஞ்சாம ஏறி நின்னு அஞ்சாறு திருடி தின்னு
தாகம் எடுக்குற நேரம்
கல்லால மாங்கா அடிப்போம்
ஹேய் கையால ஏந்திப் புடிப்போம்
ஆ உப்போடு சேத்துக் கடிப்போம்
உல்லாசப் பாட்டுப் படிப்போம்
அடுத்தது நாம குளக்கரை போவோம்
அழகிகள் யாரும் குளிக்கிற நேரம்
போறாளே மஞ்சக் குளிக்க
ஏ பொண்ணுரங்கம் வாரேண்டி சேல துவைக்க
போறாளே மஞ்சக் குளிக்க
ஏ பொண்ணுரங்கம் வாரேண்டி சேல துவைக்க
நான் வேல வெட்டி ஏதும் இல்லா ஆளு
நீ வேண்டியத எங்கிட்ட தான் கேளு
அடி ஆழத்திலே எறங்குறியே மானே
ஒன் அங்கத்துல கடிச்சுப்புடும் மீனே
பானையில நீர் எடுத்து பல்லாக்கு நட நடந்து
போறா சின்னப் பொண்ணு ஜோரா
அம்மாடி அன்ன நடை அசைந்தாடும் சின்ன இடை
பாத்தா அள்ளுதடி ஆத்தா
பாவாட கீழ பறக்க பூவோட மேல மணக்க
ஏ பாலாட மேனி நடக்க தாளாது ஆச அடக்க
குடம் என மாறி இடுப்புல நானும்
இணை பிரியாம இருந்திட வேணும்
ஆ ஊரெல்லாம் வட்டம் அடிப்போம்
ஏ மச்சிகளா நாளெல்லாம் கொட்டம் அடிப்போம்
ஊரெல்லாம் வட்டம் அடிப்போம்
ஏ மச்சிகளா நாளெல்லாம் கொட்டம் அடிப்போம்
அட இந்த ஊர் முழுக்க நாம் இருக்கும் எல்ல
நம்ம ஏன்னுன்னு தான் கேட்கிறவன் இல்ல
நம்ம காட்டுல தான் மழையடிக்கும் நேரம்
ஒரு கவலையில்ல கலக்கம் இல்ல நாளும்
அண்ணன் ஒரு
கில்லாடி தான்
கண்டுக்குவேன்
பின்னாடி தான்
வச்சிடுவான்
சொக்குப் பொடி
வச்சா அது
நெத்தியடி