Machan Ennai

Machan Ennai Song Lyrics In English


நான் விரிச்ச வலையில
சிக்கினாரு மாப்பிள்ள

ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய்
ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய்

ஊர விட்டு ஊரு வந்து
மாட்டினாரு மாப்பிள்ள

ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய்
ஓஹோ ஹொய் ஓஹோ ஹொய்

கெண்ட மீனு கெளுத்தி மீனு
வாழ மீனு வவ்வா மீனு
வெறால் மீனு வஞ்சிர மீனு
அயிர மீனு நெத்திலி மீனு
நூத்துக் கணக்குல
மீன் இருக்கு ஆத்துல
நான் புடிச்சு கொழம்பு வெப்பேன்
நம்ம வீட்டு சட்டியில

அக்கா அக்கா அக்காதான்
அக்கா வேல பக்காதான்
மாட்டினாரு மாப்பிள்ள
மண்ணாங்கட்டி தோப்புல
ஹஹாஹாஹாஹாஹா

மச்சான் என்னக் கேளு
கத்துக் கொடுப்பேனே
நீச்சல் அடிக்க
ஒரு அச்சம் பிறந்தாக்கா
பக்கம் இருப்பேனே
தாங்கிப் புடிக்க
பச்ச மலை ஓரம்
பட்டப் பகல் நேரம்
ஆடை அடிக்க
குறி வெச்சுப் புடிச்சேனே
ஒத்தப் பன போலே
நீயும் இருக்க

எப்போதும் தப்பாது
வயசு பொண்ணு
வலை போட்டா
உன்னாட்டம் மீன் கிடைச்சா
ஓடிப் போக விட மாட்டா

உன் ஊரு உங்காத்தா யாரு என்ன
இவ கேப்பா
சொன்னாத்தான் ஊருக்குள்ள
வாழ உன்ன விடுவாப்பா

ஈர மத்தாப்புதான் உன் வீரம்
வெறும் கித்தாப்பு ஏன் இந்நேரம்
ஒரு சப்பாணி நீ தான்யா
எதக் கண்டாலும் பயமா இருக்கு
பஸ்கி தண்டாலும் ஏன்யா உனக்கு
அசலூர் மாமனே

இவ தேசிங்கு ராசன் பேத்தி
எவன் தொட்டாலும் அடிப்பா தூக்கி
இவ எங்கூரு ராசாத்தி
இது பின்னாடி புரியும் உனக்கும்
இப்ப முன்னாடி போடு வணக்கம்
வசமா மாட்டினே


நெத்தியில பொட்டு வெச்சு
மை பூசி பூ முடிச்சு
கண்டாங்கி சேல கட்டு
உனக்கு ஏன்யா வேட்டி சட்ட
உன்னாட்டம் சூரனுக்கு
எந்நாளும் காவலுக்கு
பின்னோடு நான் இருக்கேன்
பாவம் நீ தான் ஒண்டிக்கட்ட

உன் ஊரு உங்காத்தா யாரு என்ன
இவ கேப்பா
சொன்னாத் தான் ஊருக்குள்ள
வாழ உன்ன விடுவாப்பா

மச்சான் என்னக் கேளு
கத்துக் கொடுப்பேனே
நீச்சல் அடிக்க
ஒரு அச்சம் பிறந்தாக்கா
பக்கம் இருப்பேனே
தாங்கிப் புடிக்க

இது பாஞ்சாலம் குறிச்சி மண்ணு
இங்கு புல் கூட எதுக்கும் நின்னு
இந்த மண்ண நீ மிதிச்சாச்சு
ஒரு மல்யுத்தக்காரன் போலே
ரெண்டு முண்டாவைத் தட்டு மேலே
அத நான் பாக்கணும்

எங்க அக்காவ மொறச்சா நீயும்
தல முக்காடு போட வேணும்
ஒரு சிட்டாட்டம் நெனைக்காதே
நாங்க எல்லோரும் அக்கா சேன
இவ அன்னாடம் இடுவா ஆனை
அத நீ கேக்கணும்

நல்லாத் தான் ஆள் இருந்தும்
கல்லாட்டம் தோள் இருந்தும்
புல்லாட்டம் நெஞ்சிருந்தா
அவங்க பேரு பொட்டப் புள்ள
வில்லாட்டம் பாஞ்சிடணும்
தில்லாத் தான் பேசிடணும்
இல்லாட்டி ஆம்பளைக்கு
மதிப்பு ஏதும் இங்கே இல்லே

உன் ஊரு உங்காத்தா யாரு என்ன
இவ கேப்பா
சொன்னாத் தான் ஊருக்குள்ள
வாழ உன்ன விடுவாப்பா

மச்சான் என்னக் கேளு
கத்துக் கொடுப்பேனே
நீச்சல் அடிக்க
ஒரு அச்சம் பிறந்தாக்கா
பக்கம் இருப்பேனே
தாங்கிப் புடிக்க
பச்ச மலை ஓரம்
பட்டப் பகல் நேரம்
ஆடை அடிக்க
குறி வெச்சுப் புடிச்சேனே
ஒத்தப் பன போலே
நீயும் இருக்கே

எப்போதும் தப்பாது
வயசு பொண்ணு
வலை போட்டா
உன்னாட்டம் மீன் கிடைச்சா
ஓடிப் போக விட மாட்டா

உன் ஊரு உங்காத்தா யாரு என்ன
இவ கேப்பா
சொன்னாத்தான் ஊருக்குள்ள
வாழ உன்ன விடுவாப்பா