Machi Mannaru

Machi Mannaru Song Lyrics In English


ஏன் மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு

மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்த மொயம் பூவ
சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்
ஆ சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்

ஏன் மச்சி மன்னாரு
எம் மன்சுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு

யா ஷோக்கான குப்பத்துல
குயிலுக்கு வூடு
கேக்காத பாஷையில கூவிப் பாடு

ராசாவே ஒன்ன விட்டு
நான் என்ன பாட
அய்ய
கூசாம கையத் தொட்டு சேந்தாட

ஏ காவேரி ஆறாட்டம்
நீ மே நீ மே
ஓடாத கூவம்தான் நா மே

பழசெல்லாம் போயாச்சு
ராசா ராசா
மனசெல்லாம் பூவாச்சு லேசா

ஏ ஆசையில அள்ளிக்கினு
அங்க இங்க கிள்ளிக்கினு
உள்ளதெல்லாம் சொல்லிக்கினு
ஒன்ன வச்சு தள்ளிக்கினு
ஊரெல்லாம் ரௌண்ட் உடுவோம் வா மே

அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
அய்ய
சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

இன்னா சட பாத்துக்குனியா
இப்ப என்னான்ற
ஹெஹெஹ்ஹெஹேய்


ரீஜென்டா கோட்டு சூட்டு
போட்டுக்கினுகீரேன்
நீ கேட்டா எல்லாத்தையும்
வாங்கியாரேன்

சூப்பர் ஸ்டார்
படத்துக்குத்தான்
கூட்டிக்கிட்டு போங்க
அதுக்காக டிக்கெட்டு
ரெண்டு வாங்கியாங்க

அய்யே கெயக்கால பீச்சாங்கர
ஏம்மே ஏம்மே
கை கோத்து எங் கூட வாம்மே

நீ போகும் எடம் எல்லாம்
நான்தான் வாரேன்
தாங்காது பிரிஞ்சாலே வேறே

அப்டீங்குற
சாமி கையில் சத்தியமா
சொல்லிப்புட்டேன் நிச்சயமா
சிட்டியில நீ தான் இங்க
தர்மனுக்கு சொந்தமம்மே
சேர சம்மதத்த தாம்மே

அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
அய்ய
சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்

மச்சி மன்னாரு
எம் மனசுக்குள்ள பேஜாரு
டச்சு பண்ணாரு
டக்கரா நின்னு போனாரு
டாவு ஒரு டாவு நான் கட்டும் நேரம்
நோவு ஒரு நோவு புரியாம ஏறும்
தாரேன் ஒத்த மொயம் பூவ

அட சம்மு சம்முனு வாசம்
இப்ப சல்லு சல்லுனு தூக்கும்
ஆ சம்மு சம்முனு வாசம்
அய்ய சல்லு சல்லுனு தூக்கும்