Madham Oru

Madham Oru Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்



மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ
மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை
மலை மீது மலருவது என்னப்பூ
ஹ்ம்ம் என்ன பூ
பன்னிரெண்டு ஆண்டுகளில் ஒருமுறை
மலை மீது மலருவது என்னப்பூ

குறிஞ்சிப்பூ

பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா
பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ
பச்சைக்கிளி பேசுவது அக்கக்கா
பாடும் குயில்கள் கூவுவது குக்குக்கூ
இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்
இனிமையாக சொல்வது என்ன

அம்மா அம்மா

இச்சையுள்ள எனது பிள்ளை என்னிடம்
இனிமையாக சொல்வது என்னஅம்மா அம்மா


மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து
ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு
ஆயிரமாம் சிப்பிகளில் ஒரு முத்து
ஆலமரக் கிளைகளிலே ஒரு சிட்டு

கற்பகத்தில் கனிந்து வரும் கனி
என் கண்களிலே ஆடுதடா பொன்மணி
கற்பகத்தில் கனிந்து வரும் கனி
என் கண்களிலே ஆடுதடா பொன்மணி

மாதம் ஒரு பூ மலரும் அல்லிப்பூ
வருஷம் ஒரு பூ மலரும் மகிழம்பூ

தாயறிந்த கோழி குஞ்சு நீயடா
தனையறிந்து வாழுகின்ற தாயடா
தாயறிந்த கோழி குஞ்சு நீயடா
தனையறிந்து வாழுகின்ற தாயடா

நாளை இந்த உலகம்
உன்னை வணங்குமே
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே
நீ நடந்து செல்லும் வழியில்
மாலை வழங்குமே

ஆராரிராரி ராரிரோ
ஆராரிராரி ராரிரோ