Madhurai Meenal Marumagal

Madhurai Meenal Marumagal Song Lyrics In English




மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்

மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்

மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்

ஓரடி நடந்தா பெருமூச்சு வாங்குது
மயக்கம் உருவாச்சு
மசக்கையில் சோறு வெறுப்பாச்சு
புளிக்கிற மாங்காய் இனிப்பாச்சு

அழகான முழு நிலவு முழுகாம இருக்குதம்மா
தான் வாழும் மறுவீடே தாய் வீடாய் நினைக்குதம்மா
நடக்கும் இங்கே வளைக்காப்பு
நாம்தான் கொடுப்போம் வரவேற்பு


மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்



அண்ணியை பாரு புதுவனப்பு
ஆலய அம்மன் மறு பதிப்பு
புன்னகை பொன்னின் புது வார்ப்பு
புடவையில் நடக்கும் பூந்தோப்பு

பூப்போலே தலைச்சன் பிள்ளை
பூமியிலே நடக்க வரும்
பொல்லாத பாட்டியத்தான்
பிரம்பாலே அடிக்க வரும்
மகன்தான் நாளை வரப்போறான்
வாழ்வில் வெளிச்சம் தரப்போறான்

மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்
மூவகை தமிழும் புகழும்
முருகனைப் போலே திகழும்
வண்ணக்கிளியை வயிற்றினில் சுமந்தாள்
மதுரை மீனாள் மருமகள் ஆனாள்
மங்கல தாயானாள்