Makara Veenai

Makara Veenai Song Lyrics In English


ஓஒஓஓஓஓஒ

மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ

வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ

மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ

மதுவை உண்ட வண்டின் மனது
மலரின் நெஞ்சம் அறியுமோ
அறியுமோஓ
மதுவை உண்ட வண்டின் மனது
மலரின் நெஞ்சம் அறியுமோ
மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை
அவரும் அறிய முடியுமோ


மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை
அவரும் அறிய முடியுமோ

நன்மை தீமை அறிந்திடாமல்
நன்மை தீமை அறிந்திடாமல்
நான் மயங்கிடும் போதிலே
தூய வழி காட்டிட ஒரு
சோதரன் வந்தான்

தூய வழி காட்டிட ஒரு
சோதரன் வந்தான்