Manase

Manase Song Lyrics In English




மனசே இள
மனசே மலரும் பூ
மனசே மனதில்
நினைப்பதெல்லாம்
நடக்கும் நாள் இதுவே

ஒரு சொர்க்கத்திலே
இது உருவான உறவா
இல்லை சொர்க்கத்தையே
இங்கு உருவாக்கும் உறவா

ஆனந்தம் அலை
மோதும் கண்ணில் எந்நாளும்
கொண்டாட்டம் கும்மாளம்
மண்ணில் எப்போதும் ஹே

என்றும் சந்தோஷம்
எங்கும் சந்தோஷம் வானம்
வரைக்கும் அடடா எங்கள்
சந்தோஷம்

ஒரு வயசு ஆனது
போல் இன்பம் இருக்கு
ஒரு கோடி காலம் வாழ
ஆசை எனக்கு ஹே

ஒரு நாள் பூக்களும்
தான் தலுக்கென புன்னகைக்கும்
சிரிக்கும் மனிதனுக்கே சிகரம்
காத்திருக்கும்

பூ முதல் புல்
வரைக்கும் ஒவ்வொன்றும்
ரசித்திடலாம் குயிலின்
கூட்டுக்குள்ளே கொஞ்ச
நாள் வசித்திடலாம்

வானவில்லை
கண்டால் நீ விழி
இமைக்காதே அது
மூணு நிமிஷம் தான்
அதை இழந்து விடாதே

வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான் காலம் கை
தட்டும் இனி காதல் நித்தம்
தான் ஹே

வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான்


ஆசை வந்தாச்சே
ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே
தான் புது புது ஆசை வந்தாச்சே

ஏதேதோ கனவுகள்
தான் கண்ணில் வந்தாச்சே
இது போல வாழ்ந்திட தான்
ஆசை வந்தாச்சே

வாழ்வில் ஒரு
முறைதான் திருமண
கோலம் வரும் அடடா
அன்று முதல் ஆனந்த
காலம் வரும்

ஒவ்வொரு
இதயத்திலும் திருமண
ஞாபகங்கள் ஆயுள் காலம்
வரை இருக்கும் ஆனந்தங்கள்

உறவுகள் தான்
என்றும் உங்கள் கூட
வருமே அந்த உறவுகள்
தான் வந்தால் அந்த
வாழ்க்கை சுகமே

உலகத்தின்
உலகத்தின் செல்வந்தன்
ஆன ஒருவன் ஒரு லட்சம்
சொந்தங்கள் சேர்த்த மனிதன்

காதல் நெஞ்சமே
காதல் நெஞ்சமே இன்று
சேர்ந்திடும் அழகிய காதல்
நெஞ்சமே

நூறாண்டு
சேர்ந்திருக்க வாழ்த்தும்
நெஞ்சமே வாழ்வெல்லாம்
சந்தோஷம் வந்து கொஞ்சுமே