Manasukkul

Manasukkul Song Lyrics In English


அடியேஏஏஅம்முலு
அரங்கேறப் போகிறது உன் அந்தரங்கம்
உன் காதலுக்கு இங்கொரு கவியரங்கம்

ம்ம்ஆஹா
மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்

இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்

காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது

நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா
ஆஅஆஆஆஆ
அடடா இது தான் ஆலிங்கனம்

மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்


கண்களில் காதலின்
முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்

மாலையில் சோலையில்
இளந்தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்

கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்
ஆஅஆஆஅஆ
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்

இளகாத என் நெஞ்சில்
இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு
வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக
மொழி பெயர்த்தாய்