Mangayaril Maharani

Mangayaril Maharani Song Lyrics In English


மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகாராணி
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ

மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்

தெய்வீக பாடல்
தாய் சொல்ல கேட்டு
தெய்வீக பாடல் தாய்
சொல்ல கேட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு


வெள்ளி சங்குகள்
துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்ல தடை போடா

மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி

மங்கையரில் மகாராணி
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
ஆஆஆஆ

மாணிக்க தேரின்
காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாக தீரும்

தங்க தாமரை
மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட

மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி