Mannikka Maattaya Female

Mannikka Maattaya Female Song Lyrics In English


மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் மன்னிக்க மாட்டாயா

என் விழியில் நீர்த் துளிகள் துடைத்ததுன் கை அல்லவா என் வழியில் முள் மரங்கள் களைந்ததும் நீ அல்லவா

என் பயணம் உன் கருணை உனக்கது புரியாததா உன் அன்பே என்னுடைய காலுக்கு விலங்காவதா

மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் மன்னிக்க மாட்டாயா


என்னுடைய தெய்வமென நான் உன்னை நேசிக்கிறேன் கண் மலர்கள் நீர் சொரிய நான் வந்து யாசிக்கிறேன்

உன் அருமை நான் அறிவேன் நீ என்னை மறந்துவிடு உன் இதயம் உன்னிடமே நீ நல்ல முடிவை எடு

மன்னிக்க மாட்டாயா உன் மனமிறங்கி நீ ஒரு மேதை நான் ஒரு பேதை நீ தரும் சோதனை நான் படும் வேதனை போதும் மன்னிக்க மாட்டாயா