Maragatha Maalai

Maragatha Maalai Song Lyrics In English


மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா

இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா

வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரு மொழி நீயா

தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா

ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓஹோ
எழுதிடவாஇதழ் வரியா
இடைவெளிதான்
பெண் உயிர் வலியாஆஆஆ

நீர் கேட்டேன்
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்
கனவாக தேடி வந்ததென்ன


நான் கேட்ட
வரமாக நீ வந்தாய்
நிஜமாக நாம் என்றும்
உறவாக காலம் சேர்த்ததென்ன

ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன

மழை யாவும் வடிந்தும்
மரதூறல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன

நதி நீயா
துளி நானா
கலந்திங்கே
காதல் ஆகுதே

எழுதிடவாஆஆஆஆஆ
இதழ் வரியா
இடைவெளிதான்
பெண் உயிர் வலியாஆஆஆ