Mathapoo

Mathapoo Song Lyrics In English


ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்



மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா

வெண்சங்கு வண்ணக்காரி
வெள்ளி பூ வெண்ணெய்காரி
அழகான மாயகாரி
சொல்லேண்டி எங்கிருக்கா

பல்லாக்கில் ஏறிகிட்டு
மேடைக்கு வருவாளோடி
ரெக்கைதான் கட்டிக்கிட்டு
பறந்தோடி வருவாளோடி

ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு

மத்தாப்பு பேச்சுக்காரி
மத்தாப்பு பேச்சுக்காரி

ஒரு பொண்ணு எப்போதும்
பூவா இருப்பா
அவ சேல நூலில் இமையத்தையும்
கட்டி இழுப்பா

ஒரு பொண்ணு எப்போதும்
விட்டு புடிப்பா
அவ நெத்தி பொட்டில் நேரடியா
சுட்டு அடிப்பா

ஒரு பொண்ணு நினச்சா
ஒரு வாட்டி சிரிச்சா
அவ மனசத்தான் மனசத்தான்
மைதாவா அரைப்பா
யார் அங்கே யார் அங்கே
கல்யாண பெண்ண எங்கே

ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு ஹோய்


ஹே முத்தம் தருவாயோ
முத்தம் தருவாயோ
ஒரு சத்தம் கித்தம் கேட்காமல்
நீ முத்தம் தருவாயோ

ஹே பக்கம் வருவாயோ
பக்கம் வருவாயோ
ஒரு குங்பு கற்ற பூவை பார்க்க
பக்கம் வருவாயோ

தருகின்றேன் என்றுதான்
அப்போது சொன்னாயே
தரமாட்டேன் என்றுதான்
இப்போது சொல்வேனே

ஓ ஹையோ ஹைஹையோ
பெண் பேச்சு பொய்யையோ

மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா

வெண்சங்கு வண்ணக்காரி
வெள்ளி பூ வெண்ணெய்காரி
அழகான மாயகாரி
சொல்லேண்டி எங்கிருக்கா

பல்லாக்கில் ஏறிகிட்டு
மேடைக்கு வருவாளோடி
ரெக்கைதான் கட்டிக்கிட்டு
பறந்தோடி வருவாளோடி

ஹே கள்ள சிரிப்பு கள்ளி
உன் காது மூக்கு கிள்ளி
இப்போ வீசி காட்டவா
காச்சு மூச்சுன்னு
பேச்சு என்ன பேச்சு

மத்தாப்பு பேச்சுக்காரி
கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி
நெசமாத்தான் இங்கிருக்கா