Mathi Mayangaadhe

Mathi Mayangaadhe Song Lyrics In English


மதி மயங்காதே
ஆளைக் கண்டு மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே

நேசம் கண்டு நேசம் கொண்டு
மோசம் போகாதே
மதி மோசம் போகாதே
வேட்டையிலேகாதல் வேட்டையிலே
மனம் நாட்டங் கொண்டு
வேதனையடையாதே
காதல் வேட்டையிலே
மனம் நாட்டங் கொண்டு
வேதனையடையாதே
மனம் வேதனையடையாதே

ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே

கண்ணே மணியே கனியே
என்றுன்னை கட்டியணைத்து
முத்தமழை பொழிவார்
காதல் கடலிலே மூழ்கி
நீ தவித்திடும் போதிலே
கனவு போல் மறைந்தோடிப்
போவார் ஓ ரமணி

அவர் வரவே மாட்டார் மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே

ஹொஹோஓஓஓஓஓ
சிறு பெண்களை அடிக்கடி
முறைத்துப் பார்த்திடும்
திருட்டுப் பார்வையை மறைத்திடவே
சிறு பெண்களை அடிக்கடி
முறைத்துப் பார்த்திடும்

கருப்புக் கண்ணாடி
கருப்புக் கண்ணாடி அணிவார்
ஹ ஹ ஹா ஹி ஹி ஹீ என்று
சிரித்துப் பேசிக் கிட்டே வருவார்
காதல் வலை
விரித்துப் பிடிக்க முயன்றிடுவார்


ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே

ஸெல்ஃப் ஷேவிங் செய்து
ஃபேஸ் பவுடர் போட்டு
ஸென்ட்டுடன் பேட்லைன் பூசி
இளம் பெண்டுகள் இருக்குமிடம் தேடி
கோட்டு ஸுட்டு ஹேட்டு

கோட்டும் ஸுட்டும் ஹேட்டும் போட்டு
மேல் நாட்டு துரையைப்போல் சீராய்

பெண்களை நோட்டம் பார்க்கவே ஜோராய்
வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு
ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு
சீட்டியடித்துக் கொண்டு
சிங்கார நடை நடப்பார் பெரிய
சீமானைப் போல் நடிப்பார்
சிங்கார நடை நடப்பார் பெரிய
சீமானைப் போல் நடிப்பார்

ஆசையினாலே மயங்காதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
ஆசையினாலே மயங்காதே

நம்பாதே நீ நம்பாதே
அம்பினும் கொடிய கண்களை
வீசும் வம்புக்காரியை நம்பாதே
அபாயம் வருமே அதனாலே
மிக அபாயம் வருமே அதனாலே
வாய் அதட்டைக்காரியை நம்பாதே
வாய் அதட்டைக்காரியை நம்பாதே