May Masam |
---|
ஹே
மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்
மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே
த்ர்டீன் என்பது அன்லக்கி
நம்பர் மேற்கு உலகத்தில் த்ர்டீன்
என்பது லக்கி நம்பர் எந்தன்
விஷயத்தில் த்ர்டீன் வந்தது
ஏதோ நேர்ந்தது மங்கை
பருவத்தில் போர்ட்டீன்
வந்ததும் மாற்றம் வந்தது
எந்தன் உருவத்தில்
அடுத்த வீட்டு
பையன் அட அம்பு தொடுத்தான்
சும்மா கோலம் போட போனால்
அடி கூடாதென்றால் அம்மா
அட வயசுக்கு ஏன் வந்தேனோ
படு தொல்லை அம்மம்மா
மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே
மே மே மே மே மாசம்
ஃபிப்டீன் வந்தது
மலர்கள் பூத்தன எந்தன்
தேகத்தில் மலர்கள் எல்லாம்
கனியாய் மாறும் மாலை
நேரத்தில் சிக்ஸ்டீன் வந்ததும்
கள்ள பார்வைகள் எந்தன்
பாகத்தில் பெண்கள் கூட
ஆசை கொண்டனர் பள்ளி
கூடத்தில்
எத்தனை உள்ளது
பெண்ணில் ஏன் எதையோ
தேடுறீங்க எங்கோ போகுது
பார்வை என்னை வெட்கம்
பின்னுது போங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
மரியாதை பண்ணுங்க பெண்
மார்புக்குள் ஒரு மனசுண்டு
அட அதையும் பாருங்க
மே மாசம் 98இல்
மேஜர் ஆனேனே மேஜர்
ஆன நாளாய் நானும் பேஜார்
ஆனேனே காயா பழமா என்று
என் கன்னம் தடவும் சில பேர்
எறும்பு ஊறுது என்று என்
இடையை கிள்ளும் சில பேர்
என் ஆடைகளை தொட்டு
பார்ப்பது போல் சிலர் அங்கம்
தொடுகின்றார் அட சாலைகளில்
உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம்
வைக்கின்றார்