Mazhai Kodukkum

Mazhai Kodukkum Song Lyrics In English


டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி பி ஸ்ரீநிவாஸ்

ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்ம்ம் ம்ம் ம்ம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்ம்ம் ம்ம் ம்ம்
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்ம்ம் ம்ம் ம்ம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்

ஆஆஆஆஆஆ
ஆஆஆ

நாணிச் சிவந்தன
மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன
பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன
ஞானியர் நெஞ்சம்ம்ம்ம்ம்ம்

தினம் கொடுத்து
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே
தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக்கரமே

மன்னவர் பொருள்களை
கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்
மாமன்னன் கர்ணனோ
தன் கரம் நீட்டுவார்
மற்றவர் எடுத்துக் கொள்வார்
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாமல்
வைத்தவன் கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன்
வாழ்கவே வாழ்க வாழ்க


ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ

என்ன கொடுப்பான்
எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னேஏஏ
பொன்னும் கொடுப்பான்
பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்
இன்னும் கொடுப்பான்

இவையும் குறைவென்றால்
எங்கள் கர்ணன்
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும்தான் கொடுப்பான்
தயாநிதியே
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ

ஆண்கள் : ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி

ஆண்கள் : தாயினும் பரிந்து
சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்
துணைக் கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி