Mazhai Varuvathu

Mazhai Varuvathu Song Lyrics In English


மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்

அவள் கல கல கல என இருந்தவள்தான் மிக பட பட பட என பொரிந்தவள்தான் அவள் கல கல கல என இருந்தவள்தான் மிக பட பட பட என பொரிந்தவள்தான் அவள் சரியென நினைத்தது தவறென முடிந்தது கலகத்திலே

அவள் மிக மிக பழையவள் உலகத்திலே இன்று மிக மிக புதியவள் குணத்தினிலே இது கலியுகமோ இல்லை புது யுகமோ இவள் இதயத்திலே ஆஆஆலலல லலல லலலா

மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும்


அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள் இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள் அன்று நடந்ததை நினைப்பதில் கலங்குகிறாள் இன்று நடப்பதை நினைப்பதில் மயங்குகிறாள் ஒரு மகனுக்கு தாயென உலகத்தில் யாருக்கு தெரிகின்றது

ஒரு மனதுக்குள் ரகசியம் இருக்கின்றது அது கனவிலும் நினைவிலும் தவிக்கின்றது அவன் மறந்து விட்டான் இவள் மறக்கவில்லை கதை நடக்கின்றது ஆஆஆலலல லலல லலலா

மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் இனி அவளது உலகத்தில் பகலென்ன இரவென்ன மகனே கதிரவனாம் வரும் இரவினில் அவனே புது நிலவாம்

மழை வருவது மயிலுக்கு தெரியும் மகன் திருமுகம் மனதுக்கு தெரியும் லலல லலல லலலா லலல லலல லலலா