Megamo Aval

Megamo Aval Song Lyrics In English


மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ
உலரும்

இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்

மேகமோ அவள்
மாய பூ திரள்



வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என்
கண்களை இழந்தேன்

என் நிழலும்
என்னையே உதறும் நீ
நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்

மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

உன் ஞாபகம்
தீயிட விறகாயிரம்
வாங்கினேன் அறியாமலே
நான் அதில் அரியாசனம்
செய்கிறேன்


இலை உதிரும் மீண்டும்
துளிரும் வெண்ணிலாவும்
கரையும் வளரும் உன்
நினைவும் அது போல்
மனதை குடையும்

இலை உதிரும் மீண்டும்
துளிரும் வெண்ணிலாவும்
கரையும் வளரும் உன்
நினைவும் அது போல்
மனதை குடையும்

மேகமோ அவள்
மாய பூ திரள் தேன் அலை
சுழல் தேவதை நிழல்

அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம்
எதையோ உலரும்

இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்

இல்லை அவளும்
என்றே உணரும் மேகமோ
அவள் நொடியில் இதயம்
இருளும் அவள் பாத சுவடில்
மாய பூ திரள் கண்ணீர் மலர்கள்
உதிரும் தேவதை நிழல்

மேகமோ அவள்
மாய பூ திரள்