Megangale Parungalen

Megangale Parungalen Song Lyrics In English


மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே

மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே

நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம் கண்கள் ரெண்டே உள்ளது கனவுகள் அங்கே ஆயிரம்

நெஞ்சில் உள்ள ஆசைகள் பொன்னில் செய்த ஊசிகள் பொன்னின் ஊசி கண்ணில் காயம் செய்தது யாரை நோவது யாரை நோவது

மேகங்களே பாருங்களேன் அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே


ஊமைக்கெல்லாம் ராகமா அதற்கொரு பக்க மேளமா கானல் நீரில் ஒடமா கரையில் சென்று சேருமா

கண்கள் ரெண்டும் போனது கதை என்னவானது காலம் என்னும் தேவன் தந்த தண்டனை இனியேன் சிந்தனை இனியேன் சிந்தனை

மேகங்களே பாருங்களேன் இருவர் : அந்தியிலே சூரியனாம் அஸ்தமனம் வைகரையாம் எங்கள் வாழ்விலே எங்கள் வாழ்விலே