Mella Mella Male

Mella Mella Male Song Lyrics In English


மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே
கனவு விழிகளோடு பிறக்க
உள்ள உள்ள வெள்ளை வெளியில்
வண்ணப் பூ விரிந்து திறக்க

பூவின் பேரைக் காற்று
கேட்டுச் செல்ல
புன்னகை தான் என்று நானும் சொல்ல
ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல

அந்த பூவை சோலையாய்
மாற்றும் மாயையை
கற்றுக்கொள் என் மனமே

புன்னகை சின்ன புன்னகை
இந்த பூமி மாற்றிவிடுமே
புன்னகை சின்ன புன்னகை
அந்த வானை கையில் தருமே


அகலைப் போன்றதென் இதயம்
காதல் அதிலே தீபம்
ஒளியின் வழியே அவளின் விழிகள்
வாழ்வின் பொருளை காட்டியதோ
ஹ்ம்ம் நன ஹ்ம்ம் நன தாராரோ

தீயின் உருவம் சுருங்கும் போது
எண்ணம் எண்ணையென்றாகிடாதோ
அந்தக் காதல் ஒளியிலே
கோடி வெண்ணிலா
தோன்றச் செய் என் மனமே

ஆசைகள் சின்ன ஆசைகள்
அவை நேற்றை மாற்றும் மருந்து
ஆசைகள் சின்ன ஆசைகள்
அவை நாளைக்கான விருந்து