Mella Mella Nadandhu

Mella Mella Nadandhu Song Lyrics In English


மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்

சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு ஓடும் அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும் தூவும்

சின்ன இடையினில் மின்னலென ஒரு கோடு ஓடும் அதைக் கண்டதும் மேகங்கள் மந்திரப் பூ மழை தூவும் தூவும்

நாணத்திலே முந்தானை நனைந்தது நாயகனை எண்ணி எண்ணி கன்னி இவள் தேகம் சிவந்தது கை விரல்கள் பின்னிப் பின்னி

வஞ்சியின் அழகை சொல்லச் சொல்ல இங்கு செந்தமிழும் கொஞ்சம் சிந்தித்தது மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்


கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம் தோட்டம் அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம் கூட்டம்

கன்னி முகம் புது வண்ண மலர்களின் தோட்டம் தோட்டம் அங்கு கட்டளைக்கு வந்து வட்டமிடும் வண்டுக் கூட்டம் கூட்டம்

மோகத்திலே நெஞ்சு துடித்தது மாலை இடும் நாளை எண்ணி பூவிதழோ தந்தி அடித்தது புன்னகையின் பேரெழுதி பேச மொழி இல்லை வார்த்தை வரவில்லை இன்பத்திலே மனம் தித்தித்தது

மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கன்னங்கரு விழிகள் பேசும் புத்தம் புது மொழிகள் கோடி

இருவர் : மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்