Merkey Vidhaitha Sooriyaney

Merkey Vidhaitha Sooriyaney Song Lyrics In English


ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து

ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ


கூட்டுப்புழு
கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால்
சிறகு வரும் மெல்ல

ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே
வானம் பெரிதல்ல ஓஹோ
ஓஓஓ ஓஹோ ஓஓஓ

இதயம் துணிந்து
எழுந்த பின்னாலே இமய
மலை உந்தன் இடுப்புக்கு
கீழே

நரம்புகள் வரம்புகள்
மீறி துடிக்கட்டும் விரல்களில்
எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும்
புதுமைகள் கேட்கட்டும்

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ


சின்ன சின்ன
தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே
இருள் எதிர்த்து கொள்வோம்

குட்டுப்பட்ட
குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை நீளும் போது
புழுவும் புலி ஆகும்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

தீயின் புதல்வர்கள்
உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில்
சிலந்தியின் வலையா

புஜத்திலே வலுத்தவர்
ஒன்றாய் திரட்டுவோம்
நிஜத்திலே பூமியை
முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம்
வயதை ஆளட்டும்

மேற்கே விதைத்த
சூரியனே உன்னை கிழக்கே
முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்

இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன

விஸ்வ ரூபம்
கொண்டு விண்ணை
இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன

மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை
வாளாய் எடுத்து இன்னல்
தீர இன்னல் தீர போராட்டம்
நடத்து

ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ

அச்சம் இல்லை
அச்சம் இல்லையே