Moolai Thirugum

Moolai Thirugum Song Lyrics In English


காலை அரும்பி
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்

மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்

இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்

மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

மூளை இருந்த
இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்

கால்கள் பறித்து
கொண்டு சிறகை இரவல்
தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்

ஒரு கடிதம்
எழுதவே கை வானை
கிழிக்குமே விரல் எழுதி
முடித்ததும் அதை கிழித்து
போடுமே

இது ஆண்
நோயா பெண் நோயா
காமன் நோய் தான்
என்போமே


மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்

சோற்றை
மறுதலித்து விண்மீன்
விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர்
செல்லாது

நெஞ்சில் குழல்
செலுத்தி குருதி குடித்து
கொல்லும் வேண்டாம்
என்றால் கேட்காது

ஒரு நண்பன்
என்று தான் அது கதவு
திறக்குமே பின் காதலாகியே
வந்த கதவு சாத்துமே

இந்த நோயின்றி
போனாலே வாழ்க்கை
சௌக்கியம் ஆகாதே

மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்
ஆடும் ஆடும் ஆடும்

வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்

இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்