Morada |
|---|
மொரடாஅழுக்கா
எங்க நீயும் தொலைஞ்சி போனடா
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
உன்னையே உன்னையே
உசுரா நெனைச்சி வாழுறேன்
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
தெனமும் காத்து கிடக்குறேன்
தனியா நானும் நடக்குறேன்
நிலவ கூட அலைகிறேன்
என் கிறுக்கா
படகை போல மெதக்குறேன்
அலையா நானும் உருள்ளுறேன்
எலையா காத்தில பறக்குறேன்
என் படவா
மொரடாஅழுக்கா
எங்க நீயும் தொலைஞ்சி போனடா
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
உன்னையே உன்னையே
உசுரா நெனைச்சி வாழுறேன்
என் கருப்பா நெஞ்சில் நெருப்பா
வலைய போட்டு உன்னை
இறுக்கி நான் பிடிப்பேன்
நெறையா முத்தம் தந்து
முத்தெடுப்பேன்டா
வளைவி வாங்கி வந்து
எனக்கு போட்டு விடு
மொரடா நீ நடந்தா
குத்திடுமேடா
கருவாட்டு கொழம்பா
உன் வாசத்த நினைச்சேன்
தெனம் நானும் சமைச்சேன்
கத்திருந்தேன்டா
நீ போட்ட உடுப்ப
என் நெஞ்சோடு அணைச்சேன்
கண் மூடும் போதும்
உன்ன பார்திருந்தேன்டா
மொரடிகிறுக்கி
என்ன வந்து இழுத்து போயேன்டி
உன் கருப்பன் இங்க இருக்கேன்
உன்னையே உன்னையே
ஆத்துல நெனைச்சு ஏங்குனேன்
உன் கருப்பன் இங்க இருக்கேன்
படக்குன்னு உன்ன தூக்குவேன்
இறுக்கம கட்டி இழுக்குவேன்
பொசுக்குன்னு முத்தம் கொடுக்குறேன்
என் அழகி
விலகுனா கட்டி அனைக்குவேன்
தடுக்குனா எட்டி பிடிக்கிறேன்
ஒத்துகிட்டா உசுர குடுக்குறேன்
என் கிறுக்கி
