Mounamalla Mayakkam

Mounamalla Mayakkam Song Lyrics In English

மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில்

ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும் ஏதோ பேச வேண்டும் என்னை ஏதோ பழக தூண்டும் ஆனால் வார்த்தை இல்லை அது ஏன் சொல்லு கண்ணா

அதுதான் உன் மனம் அறியா பெண் மனம் ஓர் அலைப் போல் போய் வரும்

மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில்

நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி நதியில் இரண்டு தோணி இரண்டும் இரண்டு பாணி இணைந்தே பயணம் செல்ல நினைத்தால் என்ன சொல்ல

ஸ்தலங்கள் இரண்டுதான் கரையோ ஒன்றுதான் நாம் காண்போம் இன்றுதான்

மௌனமல்ல மயக்கம் இளமை ரதங்கள் வெள்ளோட்டம் சலனம் பார்வையில் சரசம் வார்த்தையில் மெய் சிலிர்க்கும் வேளையில்

தென்றல் காற்று தீண்டும் இந்த தேகம் குளிர வேண்டும் ஆனால் கொதிப்பதென்ன அது ஏன் சொல்லு கண்ணா

நெருப்பாய் கொதிப்பதும் நீராய் குளிர்வதும் உன் நினைவின் நாடகம்