Mouname Mouname (Happy) |
|---|
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
பரவாயில்லை கண்ணே என்னை
பாதிக் கண்ணால் பார்த்துவிடு
உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம்
உன்னில் என்னை சேர்த்துவிடு
பரவாயில்லை கண்ணே என்னை
பாதிக் கண்ணால் பார்த்துவிடு
உயிர்கள் ரெண்டும் தழுவும் வண்ணம்
உன்னில் என்னை சேர்த்துவிடு
அன்பே உந்தன் பெயரை யாரும்
அழுத்திச் சொன்னால் அழுதுதிடுவேன்
உன் பாதம் பதிந்த மண்ணைத் தொட்டு
கோயில் கட்டி தொழுதிடுவேன்
கோயில் கட்டி தொழுதிடுவேன்
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி
இதற்கு முன்னால் எந்தன் கண்ணில்
இப்படி மின்னல் அடித்ததில்லை
இதற்கு முன்னே பெண்ணே நெஞ்சம்
இரண்டு மடங்காய் துடித்ததில்லை
இன்னும் இங்கு ஜென்மம் உண்டு
என்றே நானும் நினைக்கவில்லை
உன்னைப் பிரிவதென்றால் கண்ணே
இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை
இனிமேல் ஜென்மம் எடுப்பதில்லை
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
பாடகன் மேடையில் பெளர்ணமிபோல் நீ வா
