Munnerudhan |
---|
மயிலகாள
மருதகாளஆஅஆஆ
மணி கயித்துல சோடி சேரு
வெளுத்த காள
செவத்தகாளஆஅஆஆ
இடம் வலமா சோடி சேரு
மாரி மாரி பொழிய வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்
பூமி தாயி குளிர வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்
வானம் பார்த்த கரிசக்காடு
ஏலாலங்கடி ஏலாலம்
மனசபோல இளக வேணும்
ஏலாலங்கடி ஏலாலம்
முன்னேருதான் பூட்டி
ஏலேலங்கடி ஏலேலோ
போற வழி நீ காட்டு
ஏலேலங்கடி ஏலோ
பின்னேருதான் ஓட்டி
ஏலேலங்கடி ஏலேலோ
சொல்லிபுடு ஒரு வாட்டி
ஏலேலங்கடி ஏலோ
பொன்னேரு பூட்டி
ம்ம்ம்
வெத போட வேணும்
போட வேணும்
முப்போகம் வௌஞ்சு
ம்ம்ம்
பசியாற வேணும்
ஆறவேணும்
ஏலாலங்கடி ஏலாலம்(4)
{தந்தானனா தானா
ஏலாலங்கடி ஏலாலம்
தா ன ன தா ன
ஏலாலங்கடி ஏலாலம்
த ன ன ன தா ன ன
ஏலாலங்கடி ஏலேலோ
த ன ன ன தா ன ன
ஏலாலங்கடி ஏலேலோ} (2)
ஆஅஆஅஆஅஆஅ
ஏலாலங்கடி ஏலாலம்(4)