Naalai Namathe Female

Naalai Namathe Female Song Lyrics In English


அன்பு மலர்களே
நம்பி இருங்களே
நாளை நமதே
இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே
இருக்கும் வரையிலே
நாளை நமதே
இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே
ஆனந்தம் என்னும் சோலைகள் மலர்ந்து
காய்கனியாகும் நமக்கென வளர்ந்து
நாளை நமதே
ம்ம்பாடுங்க

நாளை நமதே
நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசமென்னும் நூல்வழி வந்த
வாசமலர் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்

பாசமென்னும் நூல்வழி வந்த
வாசமலர் கூட்டம்
லல்லல்லல்லலலலல
ஆடும் அழகில் அமைவது தானே
வாழ்க்கை பூந்தோட்டம்
லல்லல்லல்லலலலல

மூன்று தமிழும்
ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவிய சிந்து

மூன்று தமிழும்
ஓரிடம் நின்று
பாட வேண்டும் காவிய சிந்து

இந்த நாள் நினைவுகள்
எந்த நாளும் மாறாது

நாளை நமதே
நாளை நமதே

வீடு என்னும் கோவிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளி மயமாக
வெளிச்சம் தாருங்களே


வீடு என்னும் கோவிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
லல்லல்லல்லலலலல
நல்ல குடும்பம் ஒளி மயமாக
வெளிச்சம் தாருங்களே
லல்லல்லல்லலலலல

நாடும் வீடும் உங்களை நம்பி
நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும்
இதயம் என்றும் மாறாது

நாளை நமதே
நாளை நமதே

தாய் வழி வந்த
தங்கங்கள் எல்லாம்

ஒர் வழி நின்று
நேர் வழி சென்றால்
நாளை நமதே

காலங்கள் என்னும்
சோலைகள் மலர்ந்து

காய்கனியாகும்
நமக்கென வளர்ந்து
நாளை நமதே

நாளை நமதே
நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே