Naan Oru Kadhanayagi

Naan Oru Kadhanayagi Song Lyrics In English


நான் ஒரு கதாநாயகி
நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்

மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை
மேனகை வந்ததும்
முனிவனை கண்டதும்
மோகம் கொண்டதும் தவறு இல்லை

மெல்லிடையால்
ஒரு பிள்ளை பெற்றதும்
முனிவன் வெறுத்ததும்
முறை இல்லை

ஊருக்கு சொன்னால்
ஊரார் சிரிப்பார்
உனக்கே சொன்னேன் விதியில்லை
நான் உனக்கே சொன்னேன்
விதியில்லை

அவள் ஒரு கதாநாயகி
அவள் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
ஒரு வழியினில்
அவள் ஒரு சகுந்தலை
ஒரு வகையினில்
அவள் ஒரு அகழிகை
அவள் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்


ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்
ஆத்திரத்தாலும்
அவசரத்தாலும்
அங்கொரு கன்னி தாயானால்

ஆத்திரகாரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்
ஆத்திர காரனை
திருத்திட ஒருத்தி
சாத்திர படியே தாயானால்

தாயாகாத
பெண்களுக்கெல்லாம்
தாய்மை தருவது உன்னருளோ
தாய்மை தருவது உன்னருளோ
அவள் ஒரு கதாநாயகி

ம்ம்நான் ஒரு கதாநாயகி
ஒரு வழியினில்
நான் ஓர் சகுந்தலை
ஒரு வகையினில்
நான் ஓர் அகழிகை
நான் முள்ளில் விழுந்த
பட்டு சேலை
முள்ளாய் நின்றவர் யார்