Naan Paadum Mouna Raagam

Naan Paadum Mouna Raagam Song Lyrics In English


நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஏன் தேவி
இன்று நீ என்னைக்
கொல்கிறாய் முள்
மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

உன்னைத்
தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா


கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து
போனது காம்பு என்ன
வாழ்வது

காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா