Naan Petha Magane

Naan Petha Magane Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி

நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

விலைவாசி மாறிப் போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய் விலைவாசி மாறிப் போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்

சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய் சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்

அவசரமாய் வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா அவசரமாய் வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா க்யூவிலே நீ வந்து நிக்கணுமா குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா

அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா


பெட்ரோல் விலை ஏறிப் போச்சு பாக்கெட்டையே மீறிப் போச்சு பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு பெட்ரோல் விலை ஏறிப் போச்சு பாக்கெட்டையே மீறிப் போச்சு பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு

பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி தேடிப் போனா நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி தேடிப் போனா நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு

பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில மகனே உனக்கேன் தெரியவில்லை

அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா

அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா