Naan Un Joshua

Naan Un Joshua Song Lyrics In English


என் பார்வைகள் மாறி போனது
என் பாதைகள் மாறி போனது
காரணம் நீ என்றானது
என் கால்கள் ஏன் மேலே போகுது

உன் கலவரம் கண்ட கண்களை
கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை
உன் கவசமாய் என்னை மாட்டிவை
உன் மனதிலே என்னை பூட்டிவை

நான் உன் ஜோஷ்வா
என்னோடு சேர்ந்து வாழவா
விண்ணையும் தாண்டி போவோம்
வருவாயா

ஹோ ஹோ வா வா என்னோடு வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டி செல்வாயா

என் மடியிலே வந்து அமர்ந்திடு
உன் முடியினுள் என்னை மறைத்திடு
ஒரு கடியிலே என்னை கரைத்திடு
உன் பிடியிலே என்னை அணைத்திடு

உன் முகத்திலே உள்ள சிரிப்பினை
என் கண்களால் தின்ன எடுத்துவை
உன் உதட்டின் மேல் உள்ள சாயத்தை
என் முகத்திலே பூசி காய வை

நான் உன் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காண வா
எங்கு போனாலும்
என்னை கூட்டி செல்வாயா


நிலம் போல நான் என்றும் இருக்க
நிழல் போல நீ என் மேல் கிடக்க
உன்னை தாங்கிட என் உயிர் பிரிக்க
இமை போலே நான் உன்னை காக்க

வாழ்வேனே தினம்

என் பார்வைகள் மாறி போனது
என் பாதைகளும் மாறி போனது
காரணம் நீ என்றானது
என் கால்களும் மேலே நோக்கி போகுது

உன் கலவரம் கண்ட கண்களை
கொஞ்சம் என்னைத்தான் நம்பி பார்க்க வை
உன் கவசமாய் என்னை மாட்டிவை
உன் மனதிலே என்னை பூட்டிவை

நான் உன் ஜோஷ்வா
என்னோடு சேர்ந்து வாழவா
விண்ணையும் தாண்டி போவோம்
வருவாயா