Naan Unnai Kaana |
---|
இசை அமைப்பாளர் : ராஜ் கோட்டி
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே
என் காதல் நெஞ்சில் சந்தேகம் இல்லையே
பெண்ணே எந்தன் ஆசை தாரா
கண்ணே நீ என் காதல் மீரா
உன்னை எண்ணி பூத்த ரோஜா
வந்தேன் இங்கு பாரு ராஜா
மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
மல்லிப் பூவில் மஞ்சம் இட்டு உன்னை அள்ளவா
மையல் தீர நானும் உன்னை கட்டிக் கொள்ளவா
அன்பு காட்டி நானும் உன்னை ஏங்க வைக்கவா
ஆசைக் கொண்ட காளை உன்னை அடக்கி வைக்கவா
அவசரம் பெண்ணுக்கு சரிப்படுமா
வாலிப குறும்புகள் உனை விடுமா
பருவக் கொடி கரத்தை பிடி
ஓஓஓஓஒஹ்ஹ
ஓஓஓஓஒஹ்ஹ
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
அரும்பு மீசை உள்ள கண்ணா வீரம் துள்ளுதா
துள்ளி துள்ளி ஆடும் என்னை சுவைக்க சொல்லுதா
உன்னைக் கண்டு தாகம் கொண்ட மன்னன் நானடி
கட்டில் இங்கு குலுங்கி ஆட மோகம் தீரடி
மதன் விடும் மலர்க்கணை பாய்கிறதே
வயசுகள் சரசங்கள் புரிகிறதே
ததிங்கினத்தோம் தொடங்கிடுவோம்
ஓஓஓஓஒஹ்ஹ
ஆஆஆஆஹ்ஹ
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
உன்னை காதல் செய்ய வந்தேனே பெண்மணி
பெண்ணே எந்தன் ஆசை தாரா
கண்ணே நீ என் காதல் மீரா
உன்னை எண்ணி பூத்த ரோஜா
வந்தேன் இங்கு பாரு ராஜா
மனம் ரெண்டும் ஒன்று சேர்ந்ததே
நான் உன்னை காண வந்தேனே கண்மணி
நான் உன்னை கண்டு மலர்ந்தாடும் முல்லையே