Naan Vanangum Deivame

Naan Vanangum Deivame Song Lyrics In English


இசை அமைப்பாளர் : எஸ் வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா

பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ பாடி வரும் நிலவோ வெண்பளிங்கான மேனியோ பார்வையில் நின்று ஒளிப் பந்தாடும் மின்னலோ பக்கத்தில் வந்த கன்னியோ கண்ணான கண்ணே

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா


எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே எத்தனை பிறவிகள் எடுத்தே வந்தாலுமே உன்னுடன் ஒரு முறை வாழ்ந்தாலே போதுமே எண்ணம் நிறைவேறுமா கண்ணான கண்ணா

நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே

மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன் மாணிக்கப் பந்தலிட்டு மலர்மாலை சூட்டுவேன் மாடத்தில் உன்னையிட்டு தீபங்கள் ஏற்றுவேன் காணிக்கையாக ஒன்று தா கண்ணான கண்ணே

நெஞ்சத்தில் பொங்கும் இன்பமே கண்ணான கண்ணே நான் வணங்கும் தெய்வமே கண்ணான கண்ணா