Naanum Oru Rakkozhithan

Naanum Oru Rakkozhithan Song Lyrics In English


நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஓநைனா ஒராசா

நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் ஹான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஓநைனாநைனா ஒராசாமவனே

ஊருக்குள்ள தண்ணிப் பஞ்சம் அந்த பஞ்சம் இங்கே இல்லை கேட்டவுடன் கிடைக்குதப்பா கடா மார்க் ஊருக்குள்ளே

சீசாவத்தான் கையில் ஏந்தும் ராசா நீதான் தேவதாஸு நைனா நீங்க நாலாங் கிளாஸூ நானும் இப்போ ஆறாங் கிளாஸூ

நம்மாட்டமா ஒரு அப்பன் புள்ள அடடடேய் நான் பாத்துட்டேன் இந்த நாட்டில் இல்லவே இல்லப்பா நட்டநடு வீதியிலே கொட்டமடிப்போம்

நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு கொக்கரக்கோ அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ஓநைனா நான் பெத்த ஒராசா எங்கப்பா


ஆகாயத்தில் நட்சத்திரம் ஒன்னா ரெண்டா எண்ணிக் கூறு நானறிஞ்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாரு

ராத்திரியில் மின்னுறது சூரியனா சந்திரனா பட்டப்பகல் நேரம் இது ஹாங் கேட்டா பதில் சொல்லுவேனா

அம்மாடியோவ் நீ அறிவாளிதான் கண்ணு ஓம் பிள்ளையும் நைனா உம்போலதான் அப்பிடியே என் உடம்பு புல்லரிக்கும் உன்ன நெனச்சா அய்யய்யோ

நானும் ஒரு ராக்கோழிதான் நீயும் ஒரு ராக்கோழிதான் அப்பன் புள்ள பந்தம் இல்ல தண்ணியடிச்சா குப்பன் சுப்பன் போலதான்டா மில்லியடிச்சா ரைட்டு ஓநைனா லெப்ட் ஒராசா ஐயோ ஓநைனா நைனா நைனா ஓராசா என் ராசாஆஆ போலாம் ரைட்டு