Nadiga Nadigaa |
---|
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
ஒரு ரசிகை போல்
தூரம் நின்று உன்னை
நாளும் பூசித்தே உன்னை
சொட்டு சொட்டு சொட்டாய்
ரசிக்கிறேன்
உன்னை வைத்து
வாழ்க்கை ஒன்று இயக்கிட
யோசித்தே உன் மீது காதல்
கொண்டு கிடக்கிறேன்
ஆண் & ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
எங்கெங்கேயோ
ஓடி அலைந்த என் வருடங்கள்
உன்னை நான் பார்த்த புள்ளியில்
குவிந்திட ஏதேதிலோ நான்
தேடிய இனிமைகள் உந்தன்
சொற்களில் கிடைத்ததே
விதி மாற்ற
வந்தாயே விழி மாற்ற
வந்தாயே புதிதாய் என்
மனதை சமைத்தாயே
ஆண் & வெயில்
கீற்று தந்தாயே குளிர் காற்று
தந்தாயே என் வாழ்வை
காதலால் சீரமைத்தாயே
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாதை எங்கும்
முள்ளடி உந்தன் காதல்
தானே நிம்மதி சகியே
சகியே
யார் வரைந்த
புன்னகை உந்தன் கண்கள்
தானே தூரிகை உயிரே
உயிரே
தலை கீழாய்
கிடந்த ஓவியம் ரசித்தேன்
வண்ணத்தின் எண்ணம்
நீயே சொல்லி கொடுத்தாய்
ஆண் & கவிதைகள்
புரியாமல் படிக்காமல்
இருந்தேன் ஆனால் நான்
உன்னை இன்று புரிந்து
கொண்டேன்
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
ஆண் & அழகே
அழகே விழியா மொழியா
எதனில் என்னை சிறை
பிடித்தாய் அழகே அழகே
துடிப்பா சிரிப்பா எதனில்
என்னை கொள்ளையடித்தாய்