Nallathor Veenai

Nallathor Veenai Song Lyrics In English


ஆண் நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண் மற்றும் சொல்லடி சிவசக்தி
எனைச் சுடர்மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோஓ
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி
நிலச்சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ


நல்லதோர் வீணைசெய்தே
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ

தசையினைத் தீச்சுடினும்
சிவ சக்தியைப் பாடும் நல்
அகம் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவம் எனச் சுடர்தரும்
உயிர்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ
இவை அருள்வதில் உனக்கெதும்
தடையுளதோ

நல்லதோர் வீணைசெய்தே ஓஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே ஓஓஒ
அதை நலம் கெடப்
புழுதியில் எறிவதுண்டோ