Nanaayam Manushanukku

Nanaayam Manushanukku Song Lyrics In English


நாணயம் மனுசனுக்கு அவசியம் தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்

நாணயம் மனுசனுக்கு அவசியம்

வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம் மனிதன் வார்த்தை காக்க உதவுவது சொந்த நாணயம் மனிதன் சொந்த நாணயம் வயத்துப் பசியைத் தீர்த்து வைக்கும் இந்த நாணயம் மனிதன் வாங்கும் கடனைக் கொடுக்க சொல்லும் உங்க நாணயம்

தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்

நாணயம் மனுசனுக்கு அவசியம்

கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாதுஊஊ கடனை வாங்கி மாடி வீடு கட்டக் கூடாது அதை உடனடியா மனைவி பேரில் எழுதக்கூடாது உயிலும் எழுதக்கூடாது கறுப்பு மார்க்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது கோர்ட்டில் காசுக்காக பொய்ச்சாட்சி சொல்லக்கூடாது

தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்


நாணயம் மனுசனுக்கு அவசியம்

நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது நம்மை நம்பினோர்க்கு திருட்டுக்கணக்கு எழுதக்கூடாதுஊஊ நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது நம்மை நம்பினோர்க்கு திருட்டுக்கணக்கு எழுதக்கூடாதுஊஊ

மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது காளை மாடாய் உழைத்தே சாப்பிட தயங்கக்கூடாது

தம்பி நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம் அதுவே நல்லோர்கள் சொல்லி வைத்த நன்மையான ரகசியம்

நாணயம் மனுசனுக்கு அவசியம் மிகவும் அவசியம்