Navinil Irukka Vaithan

Navinil Irukka Vaithan Song Lyrics In English


நாவினில் இருக்க வைத்தான்
நம்மை படைக்கிற சாமி
பெண்ணை நெஞ்சினில் தேக்கி வச்சான்
பாம்பில் படுக்கிற சாமி
உடம்புல பாதி வச்சான்
உடுக்கை அடிக்கிற சாமி
பெண்ணின் உயர்வை அறியாம
ரொம்ப படுத்துது பூமி

வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது

அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி

வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்

சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்திஓஓஓஒ

பாஞ்சாலியத்தான் பணயம் வைத்தான்
பகடையை உருட்டிய தருமன்தான்
அவ புடவைய ஒருத்தன் புடிச்சி இழுத்தான்
பார்த்துகிட்டிருந்தான் புருஷன்தான்

அடுத்தவன் மனைவி அகலிகைய
அன்று கெடுத்தவன் அந்த இந்திரன்தான்
நல்ல சீலம் கெடாத சந்திரமதியை
ஏலம் விட்டான் அரிச்சந்திரந்தான்


பொம்பளை என்ன கடைச் சரக்கா
இந்த ஆம்பளைக்கெல்லாம் அறிவிருக்கா

சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி

பெண்ஆணுக்கு தாலியக் கட்ட
பெரியார் சொன்னார் ஏட்டுலத்தான்
சொத்துரிமை பெண் பெற்றிட கலைஞர்
சட்டம் செய்தார் நாட்டிலத்தான்
பெண்ணுக்கு ஆணு சரிசமம் என்று
பாரதி சொன்னார் பாட்டுலத்தான்

அட இத்தனை இருந்தும் இன்னமும் பெண்கள்
கொத்தடிமைப் போல் வீட்டுலத்தான்
பட்டது எல்லாம் போதுமடி இப்போ
பொங்கி எழுந்து மோதுங்கடி

வீட்டுக்கு வீடு வீதிக்கு வீதி பெண்பாடு
சொல்ல வேதனையாச்சு சோதனையாச்சு இப்போது
அம்பிகை என்று கோயிலில் வைத்து கும்பிடுவார்
அவள் ஆடை சுமந்து வீதியில் வந்தால் கூப்பிடுவார்

சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி
சக்தி பராசக்தி அவள் சக்தி பராசக்தி