Nee Aatukkuty

Nee Aatukkuty Song Lyrics In English

நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே வாயக் கட்டி என் வயித்தக் கட்டி உன்ன நான் வளத்துப் பாத்திருப்பேன் செல்லக்குட்டியே

மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம் பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம் மெட்டெடுத்து போட்டி போட்டு பாடிப் பாப்போம் பட்டி தொட்டி எட்டி எட்டி சுத்திப் பாப்போம்

உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா எந்நாளும் கொண்டாட்டம்தான் உல்லாசம்தான் ஒண்ணா ரெண்டா எந்நாளும் கொண்டாட்டம்தான்

நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

அன்பை நானும் சொல்லித் தரல என் ஆட்டுக்குட்டி பள்ளியில படிச்சதில்ல கொஞ்சச் சொல்லி கேட்டதில்ல என் ஆட்டுக்குட்டி முத்தம் தரும் கணக்கு இல்ல

மைனா மைனா ஜோடி இருக்கா ஒண்ணாக உன் கூட்டில் நாங்களும் உண்டா வேணாமுன்னா விட்டு விடு நீ ஆகாயம் எங்களுக்கு மூடி இருக்கா

நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து நந்தவனத் தோப்பு எங்க முகம் பாத்து நாட்டியத்தத்தான் ரசிக்கக் காத்திருக்குது

நீ ஆட்டுக்குட்டி நான் பாட்டுக்குட்டி இந்த பாட்டுக்குட்டி வளக்குற ஆட்டுக்குட்டியே

ஊர்க் கதை ரொம்ப இருக்கு அதன் மத்தியில நம்ம கதை கொஞ்சம் இருக்கு ஊர்வலத் தகராறு ஊர் கெட்டிருக்கு ஒத்துமையும் அதில் இருக்கு

கல்யாணமோ நேத்திக் கடனோ ஆட்ட வளத்தோரே வெட்டுவாங்க அரிவாளுக்கு புத்தி ஏதுங்க மனுசாளா பொறந்தாலே புத்தி வேணுங்க

ஏரியில தூண்டில் போடுகிற ஆளு ஏரியில தூண்டில் போடுகிற ஆளு தீனி வைப்பார் மீனுக்குன்னு மீன தின்னத்தான்