Nee Enna Pesuvaai Duet

Nee Enna Pesuvaai Duet Song Lyrics In English


நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம்
நம் மௌனம் அறியும்
அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

உலகத்திலே சிறந்த மொழி
நீ பேசும் மௌன மொழி

நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்

ரயிலோடும் வழியோடு
ஒரு பூச்செடி தான் என் வாழ்க்கை
வெயிலோடும் மழையோடும்
அதை காத்திட வந்தது உன் கை
நதியென்ன கடலென்ன அட
எல்லாமே மழைதானே
உன் மேகம் என் மேகம்
அது வேறென்றால் பிழைதானே

வாழ்க்கையிலே சில உறவை
பாதியில் பார்ப்போமே
பார்த்ததுமே நம் வாழ்வில்
மீதியை பார்ப்போமேஹே

உலகத்திலே சிறந்த மொழி
நீ பேசும் மௌன மொழி

மௌனம் ஒரு கடல் போலே
அது புயல்கள் உறங்கும் பகுதி
புயல் தாண்டி ஊடுருவும் உன் வார்த்தை
எனும் கருவி


மௌனம் எனும் மேகத்திலே
நீ பேசும் மொழி காற்றாக காற்றாலைகள்
மோதியதால் நம் வார்த்தையெல்லாம் மழையாக

மழை காற்றை வரவேற்க
ஜன்னல் திறப்போமா
மழை பேசும் மொழி
கேட்க குடைகள் தடுப்போமா ஓஓ

உலகத்திலே சிறந்த மொழி
நாம் பேசும் மௌன மொழி

நீ என்ன பேசுவாய்
என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன்
உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம்
நம் மௌனம் அறியும்
அந்த மௌனம் கோடி பாசை பேசுமே

நனனே நன நனனே