Nee Moginiya |
|---|
நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ராதாவா சீதாவா யாரம்மா நீயம்மா
உன்ன பார்த்திருக்கிற என் மனசுக்கு
பதில் ஒண்ணு சொல்லு
அட வா ஆணழகா
கொட மொளகா மூக்கழகா
கோழி முட்டை கண்ணா வா
ஹா இங்கே வா இப்படி வா
ஹா உனக்கு பிடிச்சிருக்கிற பைத்தியத்துக்கு
வைத்தியம் இருக்கு
நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு
ஓஹோ
அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு
ஆஹா
ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு
ஆஹா
அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு
ஹஹஹா
தேடித் தேடி நான் அலைஞ்சேன்
தினம் தினமும் நான் துடிச்சேன்
கடைசியிலே புடிச்சுப்புட்டேன் உன்னை
ஓஹோ ஆணழகா
கொட மொளகா மூக்கழகா ஹா
நெஜமாதானா நெனச்சது என்னை
தானா அது நானா
நம்பிடுவேனா நடிப்பிதுதானா
போனாயே வீணா
தெருத் தெருவா பொண்ணிருக்கு
தெருப் பொறுக்கும் கண்ணிருக்கு
தலையிலதான் மண்ணிருக்கு போய்யா
நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
மனம் புரியாம எடந் தெரியாம
மானே பேசாதே
ஆஹா
உயிரே நீதான் நீயில்லையின்னா
பாரேன் இப்ப பாரேன்
அவ்வளவு முடிவெதற்கு
எனக்கும் கூட மனசிருக்கு
ஆசையோடு காத்திருக்கேன் வாங்க
நீ வாடியம்மா
ஆஹா
நான் வந்தேன் தேடியம்மா
நாள் ஒண்ணு சொல்லய்யா
மாப்பிள்ளை நீதானைய்யா
வந்து தாலிக்கயிறு நீ முடிக்கிற
நாள் நெருங்குதய்யா
நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஹா
