Nee Pathi Naan Pathi

Nee Pathi Naan Pathi Song Lyrics In English


நீ பாதி நான்
பாதி கண்ணே
அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

நீ பாதி நான்
பாதி கண்ணே
அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

நீயில்லையே
இனி நானில்லையே
உயிர் நீயே

நீ பாதி நான்
பாதி கண்ணா
அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

வானப்பறவை
வாழ நினைத்தால்
வாசல் திறக்கும்
வேடந்தாங்கல்

கானப்பறவை
பாட நினைத்தால்
கையில் விழுந்த
பருவப்பாடல்

மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த
பொட்டுக்கொரு
அர்த்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும்
உன் முத்துநகை ரத்தினத்தை
அள்ளித்தெளிக்கும் முன்னாலே

மெய்யானது
உயிர் மெய்யாகவே
தடையேது

நீ பாதி நான்
பாதி கண்ணே

அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா


அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே

இடது விழியில்
தூசி விழுந்தால் வலது
விழியும் கலங்கி விடுமே

இருட்டில் கூட
இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்

சொர்கம் எதற்கு
என் பொன்னுலகம்
பெண்ணுருவில் பக்கம்
இருக்கு கண்ணே வா

இந்த மனம்தான்
என் மன்னவனும் வந்து
உலவும் நந்தவனம் தான்
அன்பே வா

சுமையானது
ஒரு சுகமானது
சுவை நீ தான்

நீ பாதி நான்
பாதி கண்ணா

அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே
நீயில்லையே இனி
நானில்லையே உயிர் நீயே

நீ பாதி நான்
பாதி கண்ணா
அருகில் நீயின்றி
தூங்காது கண்ணே