Nee Sigappu

Nee Sigappu Song Lyrics In English


நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு
நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

ஓமலிப்பு தீரும் முன்னே
ஓடிப்போவாய் ரங்கூனுக்கு
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

சீமைக்கு போற மச்சான்
மூளைய எங்கே வச்சே
பட்டணம் சுத்தி சுத்தி
கெட்டதோ ஐயா புத்தி

எங்கே நீ போனா என்ன
அங்க நான் வாரேன் கண்ணா
மாமதுரை பக்கம்
அட நம்மப் பத்திதானே பேச்சு
மார்கழி ஆகும் முன்னே
மாலையிட்டா கெட்டாப் போச்சு
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

நீயும்தான் பத்து மாசம்
நானுந்தான் பத்து மாசம்
ஆனத நீயே பாரு
நான் அதுல தோத்தா கேளு


கொட்டுன காய தேளு
வுட்டுடா புள்ளப் பூச்சி
நீரிழிக்க தண்ணி
அதில் நீயே வந்து மாட்டிக்கிட்ட
பொண்ணுனா என்னயின்னு
நானே இப்ப காட்டப் போறேன்
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே

நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

வேணுமின்னா தொட்டுக் கொள்ள
ஊறுகாய் நானா ராசா
கிள்ளுற கீரையின்னு
எண்ணின என்னை லேசா

உன்ன நான் விட்டு வச்சா
பொண்ணு நான் இல்ல மச்சான்
வாடிப்பட்டி சந்தை
ஒரு வண்டிக் கட்டி நானும் வாரேன்
மாப்புள்ள மானம் எல்லாம்
கூறுக்கட்டி விக்கப்போறேன்
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே (நீ)

நீ சிகப்பு நான் கருப்பு
ஊரெல்லாம் ஓமலிப்பு

ஓமலிப்பு தீரும் முன்னே
ஓடிப்போவாய் ரங்கூனுக்கு
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே
இன்னாரு மவனே அட மன்னாரு மவனே