Neeraadum

Neeraadum Song Lyrics In English




நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம் ஸ்ஸ் ஆஅ
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே
பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின்
புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா

நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா

தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது


நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா

மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே

நீராடும் அழகெல்லாம்
நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை
நீ தொட்டுப் பார்க்க வா வா