Neerada Neram

Neerada Neram Song Lyrics In English


நீராட நேரம் நல்ல நேரம்
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை

காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலரக் கண்டாயோ ஓஓஓ
கோலம் காணத் துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ
நானும் கண்டேன் உன்னை
நீயும் கண்டாய் என்னை

போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட
போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட

நீராட நேரம் நல்ல நேரம்

ஆடும் பருவம் பதினாறு
அங்கம் யாவும் வரலாறுஊஊஊஉ
இதழின் ஓரம் தேனாறு
இடையின் ஓரம் பால் ஆறு
பெண்ணின் உள்ளம் இங்கே காதல் வெள்ளம் எங்கே
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்


நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை

தங்கம் உண்டு மேனியிலே
வைரம் உண்டு விழிகளிலே ஏஏஏ
முத்தும் உண்டு பல்லினிலே
பவழம் உண்டு இதழினிலே
கணத்தில் என்னை அணைத்து
கடத்தல் உடனே நடத்து
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்

நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை