Neeye Neeye Nila

Neeye Neeye Nila Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா

நானே நானே நிலா போவோம் போவோம் உலா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா
மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது
கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா

நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா

ஹே பொட்டு வச்ச பூவை தொட்டு வச்ச போது
விரலே மின்சாரமா அடடா இதுதான் சம்சாரமா

அள்ளி முகம் சேர்த்து கொள்ளையிடும் கூத்து
இதுதான் சந்தோஷமா அடடா இதழில் சங்கீதமா

கண் ஜாடை அர்த்தங்கள் போதும்
நெஞ்சில் கள்ளூறுது உள்ளே நண்டூறுது
காணாத கோலங்கள் கண்டு
உள்ளம் கொண்டாடுது பெண்மை திண்டாடுது


நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா
மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா

ஆஆபால் பழங்கள் ஏந்தி பக்கம் வந்த பெண்ணே
பாலும் நீயே கண்ணே அருந்தும்
பழமும் நீயே பெண்ணே

ஊதுவத்தி வாசம் ஊர் முழுக்க வீசும்
ஆணின் வாசம் அதை நான்
அறிந்தேன் அறிந்தேன் கண்ணா கண்ணா

எப்போதும் இல்லாத வண்ணம்
பெண்மை நின்றாடுதோ என்னை வென்றாடுதோ
அப்போது இல்லாத சொந்தம்
இன்று உண்டானதோ கட்டில் ரெண்டானதோ

நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
நீயே நீயே நிலா போவோம் போவோம் உலா
மாலையை மாற்றிய மங்கல பூங்கொடி
சேலையை மாற்றடி சும்மா சும்மா யம்மா யம்மா

நானே நானே நிலா போவோம் போவோம் உலா
நானே நானே நிலா போவோம் போவோம் உலா
மன்மத சாலையின் ஜன்னலும் திறந்தது
கதவுகள் திறக்கட்டும் யம்மா யம்மா சும்மா சும்மா