Nethu Varai |
---|
நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை
ஆநேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை
இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே
அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை
அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை
ஆநேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை
பூவா என் மேல நீ சாஞ்சா
பூமி தன்னால சாஞ்சாடும்
பூமி இங்கே அது நீதானே
பூவா பூத்தேன் நான் உன்மேல
வாடி தெம்மாங்கு நீ பாடு
வாடை காத்துக்கு நீ ஜோடி
வண்ணமயில் கும்குமத்தில் நீராடி
உன் வாசலுக்கு வந்திருக்கு என் சாமி
என் மன்னனுக்கு சங்கதிய சொல்லாட்டி
அட யாருகிட்ட போவா உன் சீமாட்டி
அந்தியில வைக்கும் பந்தி இது இல்ல
முந்தி அத தந்தா சந்தனமும் இல்ல
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்குற ரொம்ப அக்கறை
நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால
இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே
உண்மை இது உண்மை இது
சின்ன மச்சானே
ஒத்துக்கொண்டேன் ஒத்துக்கொண்டேன்
கருத்த மச்சானே
நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால
இருவர் :
கேணி தண்ணீரும் ஆத்தோட
தானா போகாது என் மாமா
ஓடை தண்ணீரும் ஒரு நாளும்
ஒருத்தன் நிலத்தில பாயாது
பாத்தா என் தாகம் தீராது
கை சேர்த்தா உன் ஆசை மாறாது
பாட்டுக்கு பக்க மேளம் நீதான்டி
என் கூட்டுக்கு பெண் ஜோடி நீதான்டி
காட்டுக்கு கட்டில கொண்டாடி
அட வீட்டுக்கு தொட்டிலே வேண்டாம்டி
சந்தையில பார்த்த சந்தனத்து தேரே
என் சிங்கத்துக்கு நானே சீரு ஒன்னு தாரேன்
சங்கு சக்கர சாமி சக்கர
பங்கு வைக்குற ரொம்ப அக்கறை
நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
ஆஹ் கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை
நேத்து வரை யாரோட
நீ இருந்தாலும்
கண்டு கொள்ள மாட்டேனே
கன்னி பொம்பளை
இப்ப நீ என் கூட இருக்குறதுதானே
செப்பு குடம் போல சிரிக்குறதுதானே
அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை ஆ
அட உண்மையடி உண்மையடி
கன்னி பொம்பளை
அது ஒத்து கொள்ளு ஒத்து கொள்ளு
சின்ன பொம்பளை ஆஹ்
நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
ஹே ஹே
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால
தினக்தக்கட
நேத்து வரை யாரோட
நான் இருந்தாலும்
ஹே ஹே
அதை மறந்து போனேன்
என் மச்சான் முன்னால