Nijama Nijama |
---|
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் ஆனால் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுதே
பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் ஆனால் நிஜமா
நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே
வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே
வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே
இருவர் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நாம் நிஜமா
கோடை வாடை இளவேனில் காலம்
கார்காலம் நான்குமே
காதல் காலம் எந்த காலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு
திசைகள் நான்கு யாவுமே
காதல் எந்த திசையில் செல்லும் என்று
கண் சொல்ல கூடுமோ
கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
உயிர் அறை ஒன்றை உருவாக்கிய
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா