Nilave Ennidam Nerungathe

Nilave Ennidam Nerungathe Song Lyrics In English


நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி

நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி தோழி

நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம்
கொண்ட உத்தமன்
யாரோடி

நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

மலரே என்னிடம்
மயங்காதே நீ மயங்கும்
வகையில் நானில்லை
நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

கோடையில் ஒரு
நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ கோடையில்
ஒரு நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ

பாலையில்
ஒரு நாள் கொடி
வரலாம் என் பார்வையில்
இனிமேல் சுகம் வருமோ


நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

ஊமையின்
கனவை யார் அறிவார்
ஊமையின் கனவை
யார் அறிவார் என்
உள்ளத்தின் கதவை
யார் திறப்பார் மூடிய
மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ
வெண்ணிலவே

நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

அமைதி இல்லாத
நேரத்திலே அமைதி இல்லாத
நேரத்திலே அந்த ஆண்டவன்
என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன்
தூது விட்டான்

நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

மலரே என்னிடம்
மயங்காதே நீ மயங்கும்
வகையில் நானில்லை
நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

Tags